அன்னூர் பகுதியில் பிக்கப் வாகனம் மீது மோதிய பொலிரோ- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் டாஸ்மாக் அருகே நின்று இருந்த பிக்கப் வேன் மீது அதிவேகமாக மோதிய பொலிரோ காரின் பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisement

கோவை, அன்னூரில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில் உள்ள தனியார் டாஸ்மாக் மதுபான கடைக்கு முன்பாக நின்று கொண்டு இருந்த பிக்கப் சரக்கு வாகனம் மீது, கட்டுப்பாட்டை இழந்த பொலிரோ கார் ஒன்று அதிவேகமாக வந்து பயங்கரமாக மோதிய விபத்துச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அன்னூர் – சிறுமுகை பிரதான சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து பரபரப்பாகக் காணப்படும் ஒரு முக்கிய நெடுஞ்சாலைத் தடமாகும் இந்தச் சாலையில் அமைந்து உள்ள குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் மதுபான கடைக்கு அருகே, பிக்கப் சரக்கு வாகனம் ஒன்று சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.


​அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த மஹிந்திரா பொலிரோ (Bolero) கார் ஒன்று, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மின்னல் வேகத்தில் சாலையில் பாய்ந்து வந்து நின்று கொண்டு இருந்த பிக்கப் வாகனத்தின் மீது பின் பகுதியில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களின் பலத்த சேதம் அடைந்தன.

Advertisement

விபத்தின் பயங்கர சத்தம் கேட்டு அங்கு இருந்த மதுப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்தபடி ஓடி வந்து, பார்த்தனர். இந்த விபத்தில் வாகனங்களில் இருந்தவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டு உள்ளது.

​இந்தத் துணிகர விபத்துச் சம்பவம் முழுவதும், அங்கு டாஸ்மார்க் கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் மிகத் துல்லியமாகப் பதிவாகி உள்ளது.

Advertisement

தற்போது வெளியாகி உள்ள இந்த அதிர்ச்சி சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டாஸ்மாக் கடைக்கு அருகே இந்த விபத்து நடந்து உள்ளதால், கார் ஓட்டுநர் மதுபோதையில் அஜாக்கிரதையாக வாகனத்தை இயக்கினாரா ?, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து ஏற்பட்டதா ? அல்லது தூக்கக் கலக்கத்தால் இந்த விபத்து நேரிட்டதா ? என்ற கோணத்தில் அன்னூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.