கோவையில் இளைஞர்களுக்கு டிராக்டர் ஓட்டும் பயிற்சி- விண்ணபிக்கும் விவரங்கள் இதோ…

கோவை: கோவையில் இளைஞர்களுக்கு டிராக்டர் ஓட்டும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் உதவி உழுவை இயக்குநர் பயிற்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

2026-27 ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு அரசுதிறன் மேம்பாட்டு கழகத்தால் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் உதவி உழுவை இயக்குநர்பயிற்சி (27 நாட்கள்) மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பயிற்சிகள் செயல்படுத்தப்பட உள்ளது. இப்பயிற்சி கோவை, மருதமலை சாலையிலுள்ள அரசு இயந்திரக்கலப்பை பணிமனையில் இத்துறையின் வல்லுநர்களால் அளிக்கப்படஉள்ளது.

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் பயிற்சியாளர்கள் நிபந்தனைகளுக்குட்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.

Advertisement

இப்பயிற்சிக்கான கல்வித்தகுதி குறைந்தபட்சம் 8ஆம் வகுப்புதேர்ச்சி, ஏதாவது ஒரு பிரிவில் டிப்ளமோ, ஏதாவது ஒரு பிரிவில் ITI, ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு, வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் வைத்திருப்பவர், முன்னோடி விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர். வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் ஆவர்.

காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் பயன் SIDH மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக வேளாண்மைப் பொறியியல் துறையில் வழங்கப்படும் இலவச பயிற்சி ஆகும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்-19.06.2026 ஆகும். பயிற்சி ஆரம்ப நாள் – 22.06.2026 ஆகும்.

விண்ணப்பிக்க / பதிவு செய்திட / பயிற்சி பெறுபவர்கள் அளிக்க வேண்டிய விபரங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Passport Size Photo), வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம், (Bank Pass Book 1 Page) ஆதார் அட்டை (Aadhaar Card) கல்வித்தகுதிக்கான சான்று (Educational Qualification) சாதிச்சான்று (Community Certificate).

பயிற்சி நடைபெறும் அலுவலக முகவரி- உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், அரசு இயந்திரக்கலப்பை பணிமனை, மருதமலை மெயின்ரோடு, கோவை 641003. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 9566392491 9566525453 பயிற்சிக்கான Online Registration தற்போது skillindiadigitalgov.in என்ற இணையத்தளத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


இப்பயிற்சியில் உதவி உழுவை இயந்திரத்தின் இயக்குநர் பயிற்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட உள்ளது. உதவி உழுவை இயக்குநர் பயிற்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் சுயவேலை வாய்ப்பு மற்றும் முன்னணி நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளில் பணிபுரியும் தகுதிகளை வளர்த்து கொண்டு அவர்களது எதிர்கால வாழ்க்கை சிறக்க ஏதுவாக அமையும்.

பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நபர்கள் இணையதளத்தில் தங்களது பெயரை பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு,
உதவி செயற்பொறியாளர் (வே.பொ)
வேளாண்மைப் பொறியியல் துறை,
இயந்திரக்கலப்பை பணிமனை,
புளியமரம் பஸ்ஸ்டாப், மருதமலை ரோடு,
கோவை-641 003.
தொலைப்பேசி எண்: 0422-2962668, அலைபேசி எண்கள் 9566392491 தொடர்பு கொள்ளலாம்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் காலையிலேயே மிதமான மழை- பணிக்கு செல்வோர் பள்ளி மாணவர்கள் சிரமம்…

கோவை: கோவை மாநகரில் அதிகாலையே மிதமான மழை பெய்ததால் வேலைகளுக்கு செல்வோர் பள்ளி மாணவர்கள் சிரமம் அடைந்தனர். கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் வேலைகளுக்கு செல்வோரும் பள்ளிக்கு செல்லும்...

Latest News Coimbatore

Video

அன்னூர் பகுதியில் பிக்கப் வாகனம் மீது மோதிய பொலிரோ- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் டாஸ்மாக் அருகே நின்று இருந்த பிக்கப் வேன் மீது அதிவேகமாக மோதிய பொலிரோ காரின் பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை, அன்னூரில் இருந்து சிறுமுகை செல்லும் சாலையில்...