கோவையில் காலையிலேயே மிதமான மழை- பணிக்கு செல்வோர் பள்ளி மாணவர்கள் சிரமம்…

கோவை: கோவை மாநகரில் அதிகாலையே மிதமான மழை பெய்ததால் வேலைகளுக்கு செல்வோர் பள்ளி மாணவர்கள் சிரமம் அடைந்தனர்.

Advertisement

கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் வேலைகளுக்கு செல்வோரும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் குடைகளை பிடித்த வண்ணம் செல்கின்றனர்.

கோவையில் கடந்த சில தினங்களாகவே அவ்வப்போது மிதமான மழையும் ஒரு பகுதிகளில் தொடர்ச்சியான மழையும் பெய்து வருகிறது. கடந்த ஒரு வார காலம் ஆகவே கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. உக்கடம், சுங்கம், காந்திபுரம், ரயில் நிலையம், ஆத்துப்பாலம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

Advertisement

இதன் காரணமாக வேலைகளுக்கு செல்வோரும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் குடைகளை பிடித்த வண்ணம் செல்கின்றனர். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் ரெயின் கோட் அணிந்த வண்ணம் பயணம் மேற்கொள்கின்றனர். காலை முதல் பெய்து வரும் மழையின் காரணமாக கோவை மாநகரில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.