சித்ரா அருகே பயங்கர விபத்து; பைக் மோதி மாணவர் பலி, நண்பர் காயம்

கோவை:கோவையில் நள்ளிரவில் ஏற்பட்ட சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, கண்ணபிரான் நகரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் முகமது ஹமீம் ஷா (19). இவர் தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் கடந்த 18-ம் தேதி இரவு தனது நண்பரான மதுக்கரை, மலையம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த சுசில் (21) என்பவரை பைக்கின் பின்புறம் அமரவைத்துக் கொண்டு அவிநாசி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

சித்ரா பகுதியில் சென்றபோது, பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லோடு ஆட்டோ மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

Advertisement

இதில் முகமது ஹமீம் ஷாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து சென்ற சுசில் காயமடைந்தார்.

இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காயமடைந்த சுசிலை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Advertisement

மேலும், உயிரிழந்த முகமது ஹமீம் ஷாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

Comments are closed.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.