ஹோப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் பரபரப்பு; மோதிக்கொண்ட பேருந்து ஓட்டுநர்கள் கைது

கோவை: பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறால் நடுரோட்டில் பேருந்துகளை நிறுத்தி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கோவை பீளமேடு போலீசார் நேற்று மாலை ஹோப்ஸ் பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இரு தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கிடையே பயணிகளை ஏற்றுவது தொடர்பாக திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இரு ஓட்டுநர்களும் பேருந்துகளை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர்.

இதைக் கண்ட ரோந்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று இருவரையும் பிரித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

Advertisement

விசாரணையில், சாய்பாபா காலனியைச் சேர்ந்த உதயகுமார் (27) மற்றும் இருகூர் ஈஸ்வரன் கோயில் வீதியைச் சேர்ந்த மாதவன் (30) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

டெத் ரேஸ் சாகசம் செய்த ஜென்-ஜி இளைஞர்கள் கைது!- மன்னிப்பு கோரிய வீடியோ

டெத் ரேஸ் பாணியில் காரின் மேற்கூரை மற்றும் ஜன்னல் வழியே ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...