கவுண்டம்பாளையத்தில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு அரங்கம்…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கவுண்டம்பாளையம், பகுதியில் மாநகராட்சி கட்டப்பட்டு வரும் பாரா ஒலிம்பிக் பல் உள்விளையாட்டு வளாகம் கட்டுமானப் பணியினை மாநகராட்சி ஆணையாளர் கட்டாரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு எண் 33க்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் சுமார் 1.10 ஏக்கர் பரப்பளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் மைதானம் கட்டப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இந்த உலகத்தரம் வாய்ந்த பாரா ஒலிம்பிக் பல் உள் விளையாட்டு வளாகம் கட்டுமாணப் பணியினை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த மைதானம் இங்கு வரும் பட்சத்தில் கவுண்டம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பெரும் உதவியாக அமையும் அதே சமயம் பல்வேறு பாரா ஒலிம்பிக் விளையாட்டுகள் இங்கு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவைக்கு பெருமை சேர்த்த ஐஐடி மாணவர்; Google AI போட்டியில் உலகளவில் வெற்றி

கூகுள் டீப்மைண்ட் உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி போட்டியில் கோவையைச் சேர்ந்த ஐஐடி சென்னை மாணவர் அர்ஜுன் திலக் ரூ.24 லட்சம் பரிசை வென்று சாதனை படைத்தார். அவரது வெற்றியை அமைச்சர் சம்பத் குமார் நேரில் பாராட்டினார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...