கோவை: பைக் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டுமென கால்டாக்ஸி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் பைக் டாக்ஸிகளை தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி கால் டாக்ஸி உரிமையாளர்கள் ஒன்று திரண்டு மனு அளித்துள்ளனர்.
கோவையில் முறைகேடாக இயக்கப்படும் பைக் டாக்ஸிகள் மீது நடவடிக்கை எடுத்து தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கால் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு மனு அளித்துள்ளனர்.
கோவையில் தனியார் நிறுவனங்கள் மூலம் பைக் டாக்ஸிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் கால் டாக்ஸிகளுக்கு வருமானம் குறைந்து விட்டதாகவும் முறையான எஃப் சி போன்ற உரிமங்களை வைத்து ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்யும் பைக் டாக்ஸி ஓட்டுனர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு புகார் அளித்தனர்.
அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பிய அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சார்பில் ஐந்து பேர் மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.




