கோவை செம்மொழிப் பூங்கா மெகா ஊழல்? செங்கோட்டையன் ரியாக்‌ஷன்

கோவை: பழனிக்கு மொட்டை போட்டவர்கள் யார் என்பது காலப்போக்கில் தெரியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவரிடம், கோவை செம்மொழி பூங்காவில் 40 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக இருந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்புகையில், புதிய அரசு இப்பொழுது தான் பொறுப்பேற்றுள்ளது என்றும் முந்தைய அரசு காலத்தில் தான் இது போன்று நடந்துள்ளது என்றும் கூறினார்.

நேற்று முன்தினம் கூட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள பட்டுள்ளது என்றும் ரேஸ் கோர்ஸ் டென்டர்கள் கூடுதலாக இருப்பதால் நிறுத்தப்பட்டுள்ளன எதுவாக இருந்தாலும் தளபதி விஜய் முதலமைச்சராக இருக்கும் வரை எந்த தவறும் நடந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் என பதிலளித்தார்.

நகராட்சி பேரூராட்சி மாநகராட்சி டென்டர்களின் காலக்கெடு அடுத்த ஆண்டு வரை இருப்பதாக கூறிய அவர் அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்றார். டெண்டர்கள் ரத்து செய்யப்படுகிறது என்றால் காரணம் இல்லாமல் செய்துவிட முடியாது என்றும் அதற்கான காரணம் வேண்டும் கூடுதலான மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டிருந்தார் முதல்வர் தெளிவான முடிவுகளை மேற்கொள்வார் என தெரிவித்தார்.

Advertisement

ஆம்னி பேருந்துகள் அரசு பேருந்துகளின் கட்டணத்தையே தாங்களும் இயக்குகிறோம் என்று கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு இது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நிலை பணம் கொடுத்தது தான் வாகனங்களை இயக்க வேண்டும் என்ற நிலை மாறி ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியது இல்லை என்கின்ற பொழுது அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலேயே தாங்களும் பேருந்துகளை இயக்குகிறோம் என்று கூறுவது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும் என்று தெரிவித்தார்.

ரெஸ்ட்ரோ பார் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, இன்றைய சூழ்நிலையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை வேகமாக எடுத்து வருகிறது என்றும் போதைப் பொருள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக கேரள மாநிலம் மற்றும் தமிழ்நாடு இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும் படிப்படியாக முதல்வர் அதைப் பற்றி முடிவுகளை மேற்கொள்வார் என்று தெரிவித்தார்.

Advertisement

பழனிக்கே மொட்டை போட்டுவிட்டார்கள் என்று எதிர்க்கட்சியினர் கூறி வருவது தொடர்பான கேள்விக்கு பழனிக்கு மொட்டை போட்டவர் யார் என்பது காலப்போக்கில் தெரியும் என்று கூறினார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...