கணுவாய் பகுதியில் கருஞ்சிறுத்தை

கோவை: கோவை கணுவாய் பகுதியில் மலை மீது கருஞ்சிறுத்தை தென்பட்டது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. காட்டுயானைகள் அதிகளவு உள்ள நிலையில் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை நடமாட்டம் தென்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை ஆடு, கோழிகளை வேட்டையாடியது.

இந்த நிலையில் இன்று கணுவாய் பகுதியில் உள்ள மலை தொடரில் கருஞ்சிறுத்தை ஒன்று நடந்து சென்றுள்ளது. அதனை அப்பகுதி மக்கள் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

Advertisement

அந்த கருஞ்சிறுத்தையை உடனடியாக பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...