2047 இலக்கு அனைவருடையது- கோவையில் ஆளுநர் பேச்சு…

கோவை: 2047 வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது நாம் அனைவருடைய இலக்கு. அதை நோக்கியே நாம் செயல்பட வேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவையில் சம்கல்ப் ஐஏஎஸ் அகாடமி துவக்க விழாவில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் சம்கல்ப் (Samkalp) ஐஏஎஸ் அகாடமி பயிற்சி நிறுவனத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் விஸ்வநாதன் அர்லேக்கர் பங்கேற்றார்.

இந்நிகழ்வில் ஐஏஎஸ் அகாடமி பயிற்சியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

Advertisement

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழக ஆளுநர், தமிழில் வணக்கம் என கூறி உரையை துவக்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், சம்கல்ப் ஐஏஎஸ் நிறுவனத்தினர் வருங்காலத்தை எதிர்நோக்கி செயலாற்றுகிறார்கள். இவர்கள் விக்சித் பாரத்தை நோக்கியும் செயலாற்றி வருகிறார்கள்.

Advertisement

எம்ர்ஜென்சி காலத்தில் நான் ஜெயிலில் இருந்தேன்.ஜாலியன் வாலாபாக் சம்பவம் நாம் அனைவரும் நன்காக அறிவோம். பிரிட்டிஷ் காரர்கள் கூறுவதை நாம் கேட்க வேண்டி இருந்தது. நாம் அடிமைகளாக இருந்தோம். தற்போது அவை மாறி இது நம் நாடு என மாறி உள்ளோம்.

IAS பயிற்சியில் நீங்கள் வித்தியாசமாக ஒவ்வொன்றையும் சிந்திக்க வேண்டும், நீங்கள் மக்கள் பணி ஆற்றுபவர்கள், அந்த பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

2047 வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது நாம் அனைவருடைய இலக்கு. அதை நோக்கியே நாம் செயல்பட வேண்டும்.’ என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகளில் பயன்படுத்த வேண்டிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறைகள் குறித்து விளக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட கல்வி நிறுவனத்தினர் மற்றும் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...