ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை மேம்பாட்டு நிதி உதவி உயர்வு…

கோவை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை மேம்பாட்டு சங்கம் சார்பில் நிதி உதவி உயர்த்தப்படுகிறது.

Advertisement

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் தொடர்பான திறனை மேம்படுத்தி உயர்த்தும் நோக்கில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தெரிவு செய்து அவர்களுக்கு தலா ரூ.1,00,000/- ஆக நிதி உதவியினை உயர்த்தி வழங்கிட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

2025-2026 ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும் ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திலும் வேலை நாட்களில் பெற்றுக்கொள்ளுமாறும் அல்லது tn.gov.in என்ற இணைய தளத்தில் உள்ள (website) https://cms.tn.gov.in/cms/migrated/document/forms/best/writers/award/application/form/2025/2026.pdf என்ற link அல்லது இணைப்பில் காணும் QR Code-ஐ ஸ்கேன் செய்தும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தைத் அணுகுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

டெத் ரேஸ் சாகசம் செய்த ஜென்-ஜி இளைஞர்கள் கைது!- மன்னிப்பு கோரிய வீடியோ

டெத் ரேஸ் பாணியில் காரின் மேற்கூரை மற்றும் ஜன்னல் வழியே ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...