கோவை: வணிக உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, மார்ட்டின் குழுமங்களின் தலைவர் சாண்டியாகோ மார்ட்டினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய 50 ஊழியர்களுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
மார்ட்டின் குழுமங்களின் தலைவர் சாண்டியாகோ மார்ட்டின், வணிக உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, அவருக்கு பாராட்டு விழாவும், நிறுவனத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய 50 ஊழியர்களுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சியும் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மார்ட்டின் குழுமங்களின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் அன்னபூர்ணா குழுமங்களின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பக்தவத்சலம், இலங்கையின் முன்னாள் ஆளுநரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான், தனா இம்பெக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாண்டியாகோ மார்ட்டினுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், மார்ட்டின் குழுமங்களில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் 50 ஊழியர்களுக்கு, அவர்களின் நீண்டகால சேவையை பாராட்டும் வகையில் தலா ரூ.30 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்க தயங்கும் நிலையில், தனது நிறுவன ஊழியர்களை குடும்ப உறுப்பினர்களைப் போல கருதி, அவர்களின் அர்ப்பணிப்பை மதித்து தலா ரூ.30 லட்சம் வழங்கிய சாண்டியாகோ மார்ட்டினின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பரிசு பெற்ற ஊழியர்கள், சாண்டியாகோ மார்ட்டினுக்கும், அவரது மனைவியும் சட்டமன்ற உறுப்பினருமான லீமா ரோஸ் மார்ட்டின், மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் எம்.எல்.ஏ., மகன் டெய்சன் மார்ட்டின், மகள் டெய்சி ஆதவ் அர்ஜுனா மற்றும் மருமகள் சிந்து ஸ்ரீ சார்லஸ் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தனர்.
வீடியோ
இந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மார்ட்டின் குழுமங்களின் ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.





