நாளைய தமிழகம் வளர்ச்சியை நோக்கி- கோவையில் We The Leaders கூட்டம்…

கோவை: நாளைய தமிழகம் வளர்ச்சியை நோக்கி என்ற தலைப்பில் வீ தி லீடர்ஸ் அமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Advertisement

அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் அமைப்பின் கவுண்டம்பாளையம் தொகுதி சார்பில் நாளைய தமிழகம் வளர்ச்சியை நோக்கி என்ற தலைப்பில் தன்னார்வலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் துடியலூர் அருகே நடைபெற்றது.

நாளைய தமிழகம் வளர்ச்சியை நோக்கி என்ற தலைப்பில் அண்ணாமலை தொடங்கியுள்ள வீ தி லீடர்ஸ் அமைப்பின் கவுண்டம்பாளையம் தொகுதி சார்பில் தன்னார்வலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அருகே என் ஜி ஜி ஓ காலனி கேட் அருகில் உள்ள கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஆலோசனைக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக முன்னாள் குடியரசுத் தலைவர் அணு விஞ்ஞானி டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாமின் நினைவு நாளை ஒட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாமின் திரு உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.

Advertisement

தமிழ்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து விஜய காண்டிபன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வீ தி லீடர்ஸ் தன்னார்வலர்கள் புவனேஷ்வரன், மேகலா, டாக்டர் சசி உள்ளிட்ட பலர் உரையாற்றினர். இதில் அமைப்பை பலப்படுத்துவது மற்றும் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாலாஜி உத்தம ராமசாமி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது அண்ணமலை போல் ஒருவரை தலைவராக ஏற்றுகொண்டது மிகப்பெரிய பாக்கியம், சமூக வலை தளங்களில் வரும் தவறான பதிவுகளுக்கும் பதில் போட வேண்டாம். நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் ஒரு சிறந்த தலைவர் பிறப்பார் இந்த நூற்றாண்டில் பிறந்த சிறந்த தலைவர் அண்ணாமலை.

Advertisement

இவரின் பின்னால் இருந்து இந்த சமூகத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்வது அனைவரது நோக்கமாக இருக்க வேண்டும். வீ தி லீடர்ஸ் அமைப்பு கட்சியாக மாறும் போது இதில் அரசியலில் வரும் நபர்கள் உரிய தகுதி இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும் அதற்கான பயிற்சி வழங்கப்படும். போதை ஒழிப்பை நாம் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும், முதலில் நம்மிடம் இருந்து தொடங்குவோம். நமது அரசியல் அறம் சார்ந்து இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட வீ த லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அனைவரும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மகேஷ்குமார், அரவிந்த் கார்த்திகேயன், கமல்நாத், கார்த்திக், பிரவீன், சுரேந்த்திரன், யோகேஷ், காளப்பட்டி செல்வராஜ், மனோஜ் உள்ளிட்ட தன்னார்வர்கள் செய்திருந்தனர். இறுதியாக ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் அதிர்ச்சி… தந்தையை பீர் பாட்டிலால் தாக்கிய மகன் சிறையில் அடைப்பு!

குடிப்பழக்கத்தை கண்டித்த தந்தையை பீர் பாட்டிலால் தாக்கி காயப்படுத்திய 22 வயது மகனை கோவை பெரிய கடைவீதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...