கோவையில் துவங்கியது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி…

கோவை: கோவையில் 16வது தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டிகள் துவங்கியது.

தேசிய அளவிலான 16வது ஜூனியர் ஹாக்கி போட்டிகள் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று முதல் துவங்கி எட்டாம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, ஹரியானா, பீகார், குஜராத் உள்ளிட்ட 29 அணிகள் போட்டியிடுகின்றன.

Advertisement

இதன் துவக்க விழா இன்று நடைபெற்றது இதில் தமிழ்நாடு ஹாக்கி அணியின் தலைவர் சேகர் மனோகர், கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்ட பிறகு இது போன்று தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் இங்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவ மழை மருத்துவ முகாம்

கோவை: கோவை மாநகராட்சியில் 264 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 15,328 பேர் பயனடைந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடந்த 8 நாட்களாக நடத்தப்பட்ட...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...