கோவை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவ மழை மருத்துவ முகாம்

கோவை: கோவை மாநகராட்சியில் 264 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 15,328 பேர் பயனடைந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடந்த 8 நாட்களாக நடத்தப்பட்ட 264 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 15,328 பேர் பயனடைந்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, மழைக்கால நோய்களைத் தடுக்கும் வகையில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த முகாம்களில் 11,021 பேருக்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையானவர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், காய்ச்சல் அறிகுறிகள் இருந்த 49 பேருக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர்.

Advertisement

கோவை மாநகராட்சியின் 33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன. மழைக்காலத்தில் பரவக்கூடிய வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களைத் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

மேலும், குடிநீரின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களின் நலன் கருதி இந்தச் சிறப்பு மருத்துவ முகாம்கள் மேலும் 5 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெரிவித்துள்ளார்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

போதை இல்லாத இந்தியா- பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோயம்புத்தூர் வழக்கறிஞர் சங்கம்

கோவை: போதை இல்லாத இந்தியாவை உருவாக்க பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோயமுத்தூர் வழக்கறிஞர் சங்கம் முன்னெடுப்பு. கோவை நீதிமன்ற வளாகத்தில், கோயம்புத்தூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து,...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...