கோவை: பத்ம விருதுகளை விண்ணப்பங்களை சமர்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை பத்ம விபுஷன் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ வழங்க அறிவித்துள்ளது.
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம்சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசுதின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருதுகள் தொழில் இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது.
இது குறித்தான விவரங்களை
மேலும் அறிய https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட விளையாட்டு தொடர்பான விண்ணப்பங்கள் மட்டுமே வேண்டும் விளையாட்டு அலுவலகத்தில் பெறப்படும்விளையாட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்துவிட்டு அதன் 3 நகல்களுடன் 31.07.2026 ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், கோயம்புத்தூர் மாவட்டம் அவர்களிடம் நேரில் வந்து சமர்பித்திட வேண்டும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.





