கோவையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம்- 4085 வழக்குகளுக்கு தீர்வு…

கோவை: கோவையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்வில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Advertisement

கோவை நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஸ்ரீதேவி தலைமையில் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் உட்பட மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி வால்பாறை சூலூர் மற்றும் மதுக்கரை நீதிமன்றங்களிலும் இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில் மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்ரீதேவி தேசிய மக்கள் நீதிமன்றத்தின் பயன்கள் குறித்து விளக்கினார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மலுமிச்சம்பட்டி அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் இடது காலை இழந்த கோகுலகிருஷ்ணன் என்பவருக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் ஏற்பட்ட சமரசத் தீர்வின் அடிப்படையில் இலக்கை தொகையாக 80 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

மேலும் நீதிமன்றத்தில் நிர்வாகிகள் இருந்த சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள் காசோலை வழக்குகள் வாகன விபத்து வழக்குகள் சிவில் வழக்குகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் வங்கி கடன் மற்றும் கல்விக் கடன் தொடர்பான வழக்குகள் குடும்ப பிரச்சினை வழக்குகள் கடன் மீட்பு தீர்ப்பாய வழக்குகள் ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மொத்தம் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது இதன் மொத்த தீர்வு தொகை 55 கோடியே 22 லட்சத்து 57 ஆயிரத்து 680 ஆகும்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…

கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்மீண்டும் வலம் வந்த வேட்டையன்காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி,...