கோவை: கவுண்டம்பாளையம் பரஞ்சோதி மாரியம்மன் க்கு ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு 32 லட்சம் ரூபாய் நோட்டுக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கோவை கவுண்டம்பாளையம் ஸ்ரீ பரஞ்சோதி மாரியம்மனுக்கு
ஆடி 18 ஐ முன்னிட்டு 32 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில்
திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்துச் சென்றனர்
ஆடி 18 தினமான இன்று கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பரஞ்சோதி மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு 10, 20, 50, 100, 200, 500 உள்ளிட்ட 32 லட்சம் புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் சில்லரை காசுகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை சுற்று பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்துச் சென்றனர். மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அம்மன் கால் மீது கால் வைத்து கம்பீரமாக அமர்ந்திருப்பது போலவும் ஒரு கையில் உள்ள பானையில் இருந்து காசுகள் கொட்டுவது போலவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்து சுற்று பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்துச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், சிவ பெருமான், முருகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.




