கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார்.

Advertisement

கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடைக்கு வந்த இளம் பெண் ஒருவர்,
செல்போன்கள் வாங்குவது போல நடித்து மேசையின் மீது வைக்கப்பட்டு இருந்த ‘ஐபோன் 13’ போனை திருடி சென்றார்.

இளம்பெண்
ஐபோனை எடுத்துத் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் வைத்து திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

​இந்தத் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், செல்போனை திருடிசென்ற அந்த இளம்பெண் மீண்டும் தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து செல்போனை திரும்ப ஒப்படைத்துள்ளார்.

Advertisement

குடும்ப சூழ்நிலை காரணமாக விலையுயர்ந்த மொபைல் போனை திருடியதாக மன்னிப்பு கேட்ட நிலையில் புகார் எதுவும் கொடுக்காமல் கடை உரிமையாளர் போனை மட்டும் திரும்ப பெற்றுக்கொண்டார்.
கடையில் ஐபோனை திரும்ப ஒப்படைத்த ஒப்படைத்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 4வது வெள்ளி ஸ்பெஷல்… பெண்கள் மறக்காமல் இந்தப் பூஜையை செய்ய தவறாதீர்கள்!

கோவை: அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தின் 4வது வெள்ளிக்கிழமையான நாளை, பெண்கள் தவறாமல் செய்ய வேண்டிய பூஜை குறித்த சிறப்பு தொகுப்பை தற்போது காணலாம். ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத...

Video

ஒரு கையில் லேப்டாப் மற்றொரு கையில் பைக்- கோவையில் வைரல் வீடியோ…

கோவை: கோவையில் உயிரைப் பணயம் வைத்து பைக்கை ஓட்டிக் கொண்டே லேப்டாப்பில் வேலை செய்த நபரின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. ​கோவை, திருச்சி சாலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே மடியில் லேப்டாப்பை...