தவெக அரசின் பட்ஜெட்டுக்கு கவுண்டம்பாளையம் MLA கனிமொழி சந்தோஷ் புகழாரம் !!

அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் முதல் செயற்கை நுண்ணறிவு ( AI) மற்றும் எந்திரவியல் (Robotics) தொழில்நுட்பம் வரை அனைவருக்குமான வளர்ச்சி பட்ஜெட்!

Advertisement

தமிழகத்தின் உள் உற்பத்தியை அதிகரித்து, அடித்தட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, SME/MSME, Startup, Entrepreneurship, AI மற்றும் Robotics உள்ளிட்ட எதிர்கால வளர்ச்சிக்கான துறைகளையும் ஊக்குவிக்கும் தொலைநோக்குப் பட்ஜெட்டாக தவெக அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

“ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது புள்ளிவிவரங்களில் மட்டுமல்லாமல், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்க வேண்டும். உள்ளூர் உற்பத்தி மற்றும் SME/MSME நிறுவனங்களின் வளர்ச்சி மூலம் வேலைவாய்ப்புகளையும் மக்களின் வருமானத்தையும் அதிகரிக்க முடியும்.

Advertisement


அதேபோல் Startup மற்றும் Entrepreneurship துறைகளை ஊக்குவிப்பது இளைஞர்களை வேலை தேடுபவர்களாக மட்டுமின்றி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்முனைவோர்களாக மாற்றும்.

உலகம் AI, Robotics போன்ற எதிர்கால தொழில்நுட்பங்களை நோக்கி நகரும் நிலையில், தமிழக இளைஞர்களுக்கு புதிய திறன்களையும் உயர்தர வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

Advertisement

அடித்தட்டு மக்களின் பொருளாதார மேம்பாடு முதல் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சி வரை அனைத்துத் தரப்பினரையும், அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பட்ஜெட் இது.”
இவ்வாறு கனிமொழி சந்தோஷ் MLA தெரிவித்துள்ளார்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை ஜி.ஆர்.டி. கல்லூரி தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர் எல். ராஜகோபால் பங்கேற்பு

கோவை ஜி.ஆர்.டி. தாமோதரன் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊடகம், தகவல் தொடர்பியல், திரைப்படம், வானொலி, பிராண்டிங் உள்ளிட்ட துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து முன்னணி நிபுணர்கள் வழிகாட்டினர்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.