நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவு; கோவையில் வாலிபர் கைது

கோவை: பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபரை ரத்தினபுரி போலீசார் கைது செய்தனர்.

Advertisement

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழையூரைச் சேர்ந்த சூர்யா (30), தற்போது கோவை ரத்தினபுரி, கண்ணுசாமி கவுண்டர் வீதி, குறுக்கு சந்து-2 பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் மீது கடந்த 2019-ஆம் ஆண்டு பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சூர்யா, பின்னர் நீதிமன்றத்தின் மூலம் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு கோவை 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. ஆனால், கடந்த 6.11.2025 முதல் நீதிமன்ற விசாரணைக்கு சூர்யா தொடர்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இதையடுத்து, அவருக்கு எதிராக நீதிமன்றம் பிணையில் வரமுடியாத பிடிவாரண்ட் (Non-Bailable Warrant) பிறப்பித்து உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் ரத்தினபுரி போலீசார் தனிப்படை அமைத்து சூர்யாவை தீவிரமாக தேடி வந்தனர்.

Advertisement

இந்த நிலையில், நேற்று மதியம் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த சூர்யாவை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சூர்யா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை; எந்தெந்த பகுதிகள்?

கோவையில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர்நாயக்கன்பாளையம், அரசூர் உள்ளிட்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகள் பாதிக்கப்படும்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.