முதலமைச்சர் கோப்பை போட்டிகள்- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு விளையாட்டு துறை சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியானது அனைத்து தரப்பினரையும் விளையாட்டில் ஈடுபடச் செய்யும் மிகச்சிறந்த முயற்சியாகும். இதன் மூலம் திறமையான விளையாட்டு வீரர்களைப் பாராட்டி, அவர்களை ஊக்குவித்து, உரிய அங்கீகாரம் மற்றும் பரிசுகளை வழங்குவது, இந்தப் போட்டியின் முக்கிய நோக்கமாகும்.

தற்போது 2026-27 ஆம் ஆண்டில் நடத்தப்படவிருக்கும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்ட மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்படவுள்ள போட்டிகளில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 வகையான விளையாட்டுப் போட்டிகளுடன், இந்த ஆண்டு முதன்முறையாக வில்வித்தை வுஷூ (Wushu) துப்பாக்கிச்சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடுஸ்கேட்டிங், நீர்விளையாட்டுக்களான கயாக்யிங் (Kayaking) மற்றும் கேனோயிங் (Canocing) போன்ற புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை நடத்தப்பட உள்ளன.

மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000/ மும், இரண்டாம் பரிசாக ரூ.2,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.1,000-மும்சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன. மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.100,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.75,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.50,000/-மும் வழங்கப்படும். குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75,000/-மும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50,000/-மும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25,000/-மும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த பள்ளிப் பிரிவிற்கு 19 யதிற்குட்பட்டவர்களுக்கு அதாவது 6 முதல் 12 வகுப்பு வரை மட்டும் 01.01.2008 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும்)கல்லூரிப் பிரிவிற்குட்பட்டவர்களுக்கு (25 வயதிற்குட்பட்டவர்கள். 01.07.2001 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும்)பொதுப்பிரிவு (15 வயது முதல் 35 வயது வரை) 15 வயது எனில் 01.01.2011 அன்றோ அல்லது அதற்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும்35 வயது எனில் 01.01.1991 அன்று அல்லது அதற்கு பின் பிறந்திருக்க வேண்டும்)அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களான நிரந்தரப் பணியாளர்களும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க 06.08.2026 http://sdat.tn.gov.in https://tnemtrophysdat.in இணையதள முகவரிகள் மூலம் முன்பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள் 31.08.2026 மாலை 6.00 மணி ஆகும். கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள இயலும். முன்பதிவு செய்யாதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள இயலாது.
எனவே, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் பொதுப்பிரிவு போட்டியாளர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஆகியோர் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் கலந்து கொள்ள ஏதுவாக இணைய வழியாக பதிவு செய்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த நபர் கைது…

கோவை:மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 5 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டு பீகாரை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்...

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...