கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும் ஒரு இளம் பெண் பயணம் செய்துள்ளனர்.
அப்போது வாகனத்தில் வந்த இளம் பெண் அவரது வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டை தலையில் அணிந்து கொண்டு அங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டை நூதனமாக திருடிக் கொண்டு வேகமாக அவர்களது இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில் அந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




