கோவையில் மண்டியிட்டபடியே நடந்து வந்து மனு அளித்த காங்கிரஸ் கட்சியினர்…

கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு மண்டியிட்டப்படியே வந்து மனு அளித்த காங்கிரஸ் கட்சியினர்.

Advertisement

காங்கிரஸ் நிர்வாகியான இமயம் ரஹ்மத்துல்லா கோவை மாவட்ட துணை தலைவராக உள்ளார். இவரது தலைமையில், கைகளில் கோரிக்கை மனுக்களை ஏந்தியபடி நிர்வாகிகள் மண்டியிட்டபடியே மாநகராட்சி அலுவலகத்திற்குள் வருகை புரிந்து கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வரும் மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதில் தெரு நாய் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும், சாரமேடு பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், உக்கடம் படகு இல்லத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து குறைந்த விலையில் படகு சவாரியை இயக்க வேண்டும், உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம் இறங்குதள பகுதியில் வேலை தடைகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“மக்களின் கோரிக்கைகளுக்காக மண்டியிட்டு வந்த காங்கிரசார்!” என்ற இந்தப் போராட்டம் மாநகராட்சி அலுவலகப் பகுதியில் கவனத்தை ஈர்த்தது.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பாஜகவை தோற்கடிக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது- கோவையில் ஃபைஜி தெரிவிப்பு…

கோவை: பாஜகவை தோற்கடிக்கும் பொறுப்பில் SDPI உள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஃபைஜி தெரிவித்துள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் SPDI கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்...

Video

தடாகம் மக்களே கவனமா இருங்க… ஷட்டரை தட்டிய யானை… வீடியோ உள்ளே…

கோவை: கோவை தடாகம் பகுதியில் ஹோட்டல் கடை ஷட்டரை தட்டிப் பார்த்துச் சென்ற காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொகுதிகள் ஆன தடாகம்...