ஒரு கையில் லேப்டாப் மற்றொரு கையில் பைக்- கோவையில் வைரல் வீடியோ…

கோவை: கோவையில் உயிரைப் பணயம் வைத்து பைக்கை ஓட்டிக் கொண்டே லேப்டாப்பில் வேலை செய்த நபரின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Advertisement

​கோவை, திருச்சி சாலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டே மடியில் லேப்டாப்பை வைத்து வேலை பார்த்தபடி சென்ற நபரின் விபரீத வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

​கோவை மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கியச் சாலையான திருச்சி சாலையில், நேற்று இரவு ராமநாதபுரத்தில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி இருசக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற வாலிபர் ஒருவர், ஒரு கையால் பைக்கின் ஹேண்டில்பாரைப் பிடித்தபடி, மற்றொரு கையால் மடியில் வைத்து இருந்த லேப்டாப்பில் (Laptop) தீவிரமாக வேலை செய்து கொண்டே ஆபத்தான முறையில் பயணித்து உள்ளார்.

​இரவு நேரத்தில் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டு இருந்த நிலையிலும், சிறிதும் அச்சமின்றித் தனது கவனம் முழுவதையும் லேப்டாப் திரையிலேயே வைத்துக் கொண்டு அவர் பைக்கை இயக்கி உள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த, அவருக்குப் பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த நபர்கள், இந்த ஆபத்தான பயணத்தைச்த் தங்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து உள்ளனர்.

Advertisement

​தற்போது இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் மிக வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோ பதிவைப் பார்த்து நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பில் ஆழ்ந்து உள்ளனர்.

“வேலை அழுத்தம் (Work Pressure) எந்தளவுக்கு இருந்தாலும், இப்படிச் சொந்த உயிருக்கும் சாலையில் செல்லும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது” எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

​இச்சம்பவம் குறித்துக் போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினர் வீடியோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கிய அந்த நபரைத் தேடி அறிவுரை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் தடகள் போட்டிகள் துவக்கம்…

கோவை: கோவையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெற்கு மண்டல தடகளப் போட்டிகள் துவங்கியது. கோவை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டிகளில், 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன்...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...