Coimbatore Weather Forecast: கோவையில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தென்மேற்குப்பருவழை குறைந்துள்ளது. அதே நேரத்தில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எல்நினோ தாக்கத்தால் மழை பொய்த்துப் போயிருப்பதாக வானிலை ஆர்வலர்கள் தெரிவித்து வரும் நிலையில், கோவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து வருகிறது.
ஆனால், கோவை மாநகரில் மழை பெய்வதில்லை. மாறாக மாவட்டத்தில் மலை மற்றும் மலையை ஒட்டியுள்ள ஒரு சில பகுதிகளில் மட்டுமே மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு, எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்ற விவரங்களை தெரிவிக்காததால் இந்த சிக்கல் நீடித்து வருகிறது.
இதனிடையே இந்த வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்திற்கு வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
பகல் நேர வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரையிலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 22 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளுக்கான வானிலை முன்னறிவிப்பை இந்த தொகுப்பில் காணலாம்.
Coimbatore Weather Forecast
ஆகஸ்ட் 18, செவ்வாய்க்கிழமை:
கோவையில் இன்று பல்வேறு பகுதிகளில் வெப்பம் அதிகரித்து காணப்படும். புறநகர் பகுதிகளில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22°C ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 19, புதன்கிழமை:
புதன்கிழமை அதிகபட்ச வெப்பம் 34°C வரையும், இரவு நேரத்தில் 22°C வரையும் பதிவாகலாம் என்று கூறப்பட்டுள்ளது. இன்றைய வானிலை படியே நாளையும் கோவையின் பல்வேறு பகுதிகளில் வெயில் அதிகரித்து காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 20, வியாழக்கிழமை:
வியாழக்கிழமை வெப்பநிலை சற்று குறைந்து அதிகபட்சமாக 33°C வரை இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு தொடரும். இரவு நேர குறைந்தபட்ச வெப்பநிலை 22°C அளவில் இருக்கும்.
ஆகஸ்ட் 21, வெள்ளிக்கிழமை:
வெள்ளிக்கிழமையும் ஓரளவு மேகமூட்டமான வானிலையே காணப்படும். லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 33°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22°C ஆகவும் இருக்கும்.
ஆகஸ்ட் 22, சனிக்கிழமை:
சனிக்கிழமை கோவையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடையிடையே லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33°C அளவில் இருக்கும் நிலையில், இரவு நேர வெப்பநிலை 22°C வரை குறைய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 23, ஞாயிற்றுக்கிழமை:
மழைக்கான வாய்ப்பு தொடரும். பகல் நேரத்தில் அதிகபட்சமாக 33°C வெப்பநிலை பதிவாகலாம். வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டு, அவ்வப்போது லேசான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 24, திங்கட்கிழமை:
ஓரளவு மேகமூட்டமான வானிலை நிலவும். புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ள நிலையில், அதிகபட்ச வெப்பநிலை 33°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22°C ஆகவும் இருக்கும் என முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.
மொத்தத்தில், கோவையில் அடுத்த 7 நாட்களில் பகல் நேரங்களில் வெப்பம் 33–34°C அளவில் இருந்தாலும், மேகமூட்டம் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறையக்கூடும். அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவ வாய்ப்புள்ளது.
வானிலை முன்னறிவிப்புகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. அப்படி அடுத்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடுகையில் அதனை நமது News Clouds Coimbatore செய்தித்தளத்தில் செய்தியாக
வெளியிடுகிறோம். இணைந்திருங்கள் வாசகர்களே…





