மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இனி செல்போனுக்கு தடை

கோவை: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இனி செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

Advertisement

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி, அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோயிலில் செப்டம்பர் மாதம் முதல் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்தான செய்தி குறிப்பில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கோயிலுக்கு வருகைதரும் பக்தர்கள் தங்கள் கைப்பேசியை கோயில் வளாகத்திற்குள் கொண்டு செல்ல வருகிற 01.09.2026 முதல் தடை செய்யப் பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் இரண்டு இடங்களில் கைப்பேசி பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தும் பணி தற்போது நடைப்பெற்று வருகிறது. பக்தர்கள் தங்களது கைப்பேசியை கைப்பேசி மையத்தில் வைத்துவிட்டு, அம்மனை தரிசனம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Advertisement

ஒரு கைப்பேசி பாதுகாப்பிற்கு கட்டணமாக ரூ.5/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு நல்கி அம்மனை வழிபட்டு செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்- MLA கனிமொழி ஓபன் டாக்…

கோவை: கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசிய ஆதாரங்கள் எல்லாம் உள்ளது என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...