கோவை: ஆல்கஹால் புகையிலைகளை விட ஆபத்தானது மொபைல் போன்கள் தான் என MLA கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
ஈஷா சார்பில் கிராமப்புற மக்கள், இளைஞர்களிடையே விளையாட்டுகளைன்ஊக்குவிக்கும் வண்நம் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 18வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. 10 மாநிலங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கு வாலிபால் பெண்களுக்கு த்ரோபால் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி மண்டல அளவிலான போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டது.

இதனை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் துவக்கி வைத்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 10 மாநிலங்களில் போட்டிகள் முடிக்கப்பட்டு அதன் இறுதி போட்டிகள் செப்டம்பர் மாதம் ஈஷாவில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், தமிழ்நாட்டு பெண்கள் என்றாலே அழகு அதனை அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும் அல்லவா என்று தெரிவித்தார்.
TVK ஆட்சி வந்தவுடன் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று அங்குள்ளவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதில் முதல்வர் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

தொழில்நுட்பமும் அறிவியலும் எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டு இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்முடைய உடல் நலம் குறைந்து கொண்டே இருக்கும் தற்பொழுது உள்ள குழந்தைகள் காலையில் மொபைல் போனை எடுத்தால் இரவு வரை அதில்தான் இருக்கிறார்கள் ஒரு வகையில் அது நல்லது என்றாலும் மற்றொரு வகையில் அதை உடல் நலத்தை பாதிக்கும் என சுட்டிக்காட்டினார்.
ஆல்கஹால் புகையிலை காட்டிலும் மொபைல் போன்கள் மிகவும் ஆபத்தானது என்றார். தற்போது நவீன கால உலகில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுகிறார்கள் அப்பொழுது குழந்தைகளுக்கு இது போன்ற செயல்பாடுகள் எதுவும் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டு பேசிய அவர் ஈஷா போன்றவர்கள் இது போன்ற விளையாட்டுகளை ஒருங்கிணைக்கும் போது அனைவரும் வந்து பங்கேற்பை தாருங்கள் என்றார்.
விளையாட்டு என்பது குழந்தைகளின் உடல் நலத்தில் மிகவும் நல்லது என்றும் அவர்களது வருங்கால இலக்குகளை எட்டுவதற்கு உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் சட்டமன்ற கூட்டத்தொடரிலும் விளையாட்டு துறை அமைச்சர் பள்ளிகளில் கட்டாயம் ஒரு மணி நேரம் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறி இருப்பதையும் சுட்டிக்காட்டி பேசினார்.





