வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து…

கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

Advertisement

கோவை மாநகர் வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டனர்.

கோவை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு வெயிலின் காரணமாக அவ்வப்போது தீ விபத்துகள் ஏற்படுகின்றன.

இன்று காலை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஒரு பகுதியில் திடீரென கொட்டப்பட்டு இருந்த குப்பைகளில் இருந்து தீப்பிடித்து எரிய துவங்கி உள்ளது.

Advertisement

உடனடியாக இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டு பின்னர் அங்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மாநகராட்சி தண்ணீர் வாகனங்களை வரவழைத்து தீயை அணைத்தனர்.

அங்கு ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் புகை மண்டலமாக காட்சியளித்தது.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்- MLA கனிமொழி ஓபன் டாக்…

கோவை: கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசிய ஆதாரங்கள் எல்லாம் உள்ளது என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...