கோவையில் தந்தை மகள் செய்த செயல்- குவியும் பாராட்டுக்கள்…

கோவை: கோவையில் சாலையில் கிடந்த பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த தந்தை மகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Advertisement

கோவையில் சாலையில் கிடந்த 1.75 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த, தந்தை மற்றும் குழந்தைக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்படுகிறது.

கோவை அஞ்சுமுக்கு பகுதியைச் சேர்ந்த விஜயானந்த் என்பவர் நேற்று இரவு, தனது குழந்தையுடன், அங்குள்ள, ஜெயின் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது, ​​1.75 லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்த ஒரு பையைக் கண்டெடுத்துள்ளார்.

அதனை B3 வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அதன்பின் ஒரு மணி நேரம் கழித்து, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மல் ராவல் என்பவர், தான் கொண்டு வந்த, 1.75 லட்சம் ரூபாய் பணம் தொலைந்து போனது குறித்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வந்தார்.

Advertisement

இதனை தொடர்ந்து தெற்கு மண்டல துணை ஆணையர் அந்தப் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்.

விஜயானந்தின் நேர்மையைப் காவல்துறையினர் பாராட்டினர். மேலும் பொதுமக்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்- MLA கனிமொழி ஓபன் டாக்…

கோவை: கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசிய ஆதாரங்கள் எல்லாம் உள்ளது என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...