ஓணம் பண்டிகை: சொந்த ஊர் செல்லும் மக்கள் – கோவை ரயில், பஸ் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்

கோவை : வரும் 26-ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் வசிக்கும் மலையாள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் கோவை ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

Advertisement

மலையாள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம், 10 நாட்கள் கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும். கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மக்கள் வசிக்கும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கோவையில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாள மக்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கோவையில் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisement

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மக்கள் வீடுகளில் பூக்கோலம் அமைத்து, விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர். ஓணம் தினத்தின் முக்கிய நாளான 26-ம் தேதி, வீடுகளில் ஓணக்கனி கண்டு வழிபாடு செய்வதுடன், கோயில்களுக்கு சென்று வழிபடுவதும் வழக்கம்.

ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமாக ஓணம் விருந்து கருதப்படுகிறது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒன்றாக அமர்ந்து பாரம்பரிய சைவ உணவுகளை சாப்பிட்டு மகிழ்வார்கள்.

Advertisement

ஓணம் விருந்தில் ஓலன், காளன், எரிசேரி, உப்பேரி, அன்னாசி பழ பச்சடி, கிச்சடி, புளியிஞ்சி, சிப்ஸ், கூட்டுக்கறி, அவியல், சாம்பார், தக்காளி ரசம், சம்பாரம் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகள் இடம்பெறும்.

இந்நிலையில், ஓணம் பண்டிகையை சொந்த ஊரில் குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக கோவையில் வசிக்கும் மலையாள மக்கள் தற்போதே தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர்.

கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கோவை ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பஸ்களில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் பயணிகள் கூட்டம் அதிகளவில் திரண்டு வருகின்றனர். குறிப்பாக பஸ்களில் சீட் பிடிப்பதற்காக பயணிகள் முண்டியடித்து ஏறும் நிலையும் காணப்படுகிறது.

ஓணம் பண்டிகை நெருங்கும் நிலையில், பயணிகளின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா செல்லும் வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என மலையாள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பண்டிகை நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்த்து, மக்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் சொந்த ஊர்களுக்கு செல்ல தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

எள்ளுக்கான விலை கணிப்பு- விவசாயிகள் கவனத்திற்கு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் எள் விதைப்புக்கு முந்தைய விலை முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது. உலகிலேயே எள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து மியான்மர் மற்றும் சூடான் நாடுகள் உள்ளன. 2024-ஆம்...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...