கோவை ராமகிருஷ்ணா கல்லூரியில் ஓணம் கோலாகலம்!

கோவை: ஓணம் பண்டிகை நிகழ்ச்சியில் Full Vibe செய்த மாணவ மாணவிகள்.

Advertisement

மலையாள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளைய தினம் கொண்டாட உள்ள நிலையில் பல்வேறு கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவையிலும் பல்வேறு கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று நவஇந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதில் கல்லூரி மாணவ மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து வந்து ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisement


கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டு மகாபலி மன்னனை வரவேற்ற மாணவ மாணவிகள் கேரள பாரம்பரிய நடனம் ஆடினர். தொடர்ந்து செண்டை மேளம் நிகழ்வில் மகாபலி மன்னனுடன் மாணவ மாணவிகள் உற்சாகமாக நடனமாடினர்.

தொடர்ந்து கல்லூரி வளாகத்தில், நடன நிகழ்ச்சிகள், டிஜே நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் அனைத்து மாணவ மாணவிகளும் உற்சாகத்துடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். ஓணம் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக கல்லூரி வளாகமே விழாக்கோலம் பூண்டது.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு…

கோவை மாநகரில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புபவர்கள் செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...