கோவை: மிலாடி நபியை முன்னிட்டு அனைத்து வகை மதுபான கடைகளையும் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாளை (26.08.2026) மிலாடி நபி கண்ணாடப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் Dry Day ஆக கடைப்பிடிக்கப்படுவதால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மதுபான கடைகளையும் மதுக்கூடங்களையும் மனமகிழ் மன்றங்களையும் மூடுவதற்கு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்த மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள் பார்கள் (FL1) பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் (IL2) செயல்படும் மதுக்கூடங்கள்,
நட்சத்திர ஹோட்டல்களில் (FL3) செயல்படும் மதுக்கூடங்கள். தமிழ்நாடு ஹோட்டல் (FL3A) சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் (FL3AA) மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் (FL) உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களையும் 26.08.2026 (புதன்கிழமை) மீலாடி நபி (Milad-un-Nabi) தினத்தன்று Dry day ஆக அறிவித்து அனைத்து மதுபான உரிமத்தளங்களை மூட உத்திரவிடப்படுகிறது.
விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும், மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்குச்சட்டம் 1937-இன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.




