தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; கோவையில் 1,200 குழந்தைகள் செலெக்ட்

கோவை: தமிழக அரசின் புதிய ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் இதுவரை 1,200 பச்சிளம் குழந்தைகள் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Advertisement

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் இந்த திட்டத்தை, முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15-ம் தேதி முதல்வர் சி. ஜோசப் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இந்த திட்டத்துக்கான பயனாளிகள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்திலும் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. ஜூன் 22-ம் தேதி முதல் பிறந்த குழந்தைகளும் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

கோவை மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை உள்ளடக்கிய இந்த கணக்கெடுப்பில் தற்போது 1,200 குழந்தைகள் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளிலும் இந்த திட்டம் உள்ளூர் அளவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சிகளில் உள்ளூர் அமைச்சர்கள் பங்கேற்று தலைமை வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்ட பயனாளிகள் கணக்கெடுக்கும் பணி செப்டம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும். திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் தகுதியான குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, தங்க நகை உற்பத்தித் துறையைச் சேர்ந்த சிலர் இந்த திட்டத்துக்கான கொள்முதல் நடைமுறை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கோவையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நகை உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த நடைமுறை பயனளிக்காமல் போகலாம் என அவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தங்க நகை உற்பத்தியாளர்கள் கூறுகையில், “தங்கம் மற்றும் நகை உற்பத்தியில் தமிழகம் நாடு அளவில் 3-வது இடத்தில் உள்ளது. கோவையில் ஆண்டுக்கு சுமார் 100 டன் அளவுக்கு தங்க நகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

எனவே, ஒரே ஒப்பந்ததாரருக்கு மொத்தமாக ஆர்டர் வழங்குவதற்கு பதிலாக, கோவை போன்ற முக்கிய தங்க நகை உற்பத்தி மையங்களில் உள்ள உற்பத்தியாளர்களிடம் அரசு நேரடியாக கொள்முதல் செய்திருக்கலாம்” என்றனர்.

ழந்தைகள் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். செப்டம்பர் 15-ம் தேதி திட்டம் தொடங்குகிறது.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...