வீட்டில் ஆட்கள் இருந்தபோதே கொள்ளை! கோவையில் துணிகரம்

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் வீட்டில் ஆட்கள் இருந்தபோதே பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை ஆர்.எஸ்.புரம், வெங்கடாசலம் காலனியைச் சேர்ந்தவர் சூரிய நாராயணன் (55). இவர் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி இரவு வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு தூங்கச் சென்றார்.

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று சோதனை செய்தார்.

அப்போது பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி குத்துவிளக்குகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள், ரூ.40 பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து சூரிய நாராயணன் ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர்.

இதையடுத்து சூரிய நாராயணன் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...