கோவை: யுபிஎஸ்சி தேர்வுக்கான தமிழக அரசின் உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு கோவையில் இன்று 6 மையங்களில் நடைபெறுகிறது.
இந்திய குடிமைப் பணிகள் தேர்வுகளுக்கான ஊக்கத்தொகை பெற முதல் நிலை தேர்வு தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று நடைபெறுகிறது.
இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் பெறும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் 10 மாதங்களுக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
கோவை மாவட்டத்தில் 6 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. இதில் மொத்தம் 1547 தேர்வுகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இந்த தேர்வை மொத்தம் ஐந்து மாற்றுத்திறனாளிகள் எழுதும் நிலையில் அவர்களுக்காக ஐந்து உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெறும் நிலையில், காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் வந்தனர்.
தேர்வு நடைபெறும் 6 மையங்களுக்கும் தலா ஒரு முதன்மை கண்காணிப்பாளர் வீதம் 6 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 81 அறை கண்காணிப்பாளர்களும், துறை அலுவலர்கள் பறக்கும் படை அலுவலர்கள் தலா 6 பேர் வீதமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.





