அன்னூரில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்…

கோவை: அன்னூர் தாலுக்கா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டத்தில், வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மெகா முகாம் 25 இடங்களில் நடைபெற்று வருகிறது.

ஊராட்சி / நகராட்சி / பேரூராட்சி / மாநகராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி இம்முகாம் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.

இம்முகாம்களில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளில் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளை சிறப்பு மருத்துவர்களால் ஆய்வு செய்து மருத்துவ சான்றிதழ்கள் வழங்குதல், மருத்துவர்களின் பரிசோதனையின் அடிப்படையில் இலவச அறுவை சிகிச்சைக்கு பயனாளிகளை தேர்வு செய்தல், மேற்படி அட்டை வழங்க பதிவுகள் மேற்கொள்ளுதல், UDID புதுப்பித்தல், மேலும், புதிதாக பதிவு செய்ய வருவோர் அசல் மற்றும் நகல் ஆவணங்களான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 4 போன்றவற்றுடன், இதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்து இருப்பின் அந்த ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளவும்.

Advertisement

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, வங்கி கடனுதவி, உதவி உபகரணங்கள் (இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரி ஆப்ரேட்டர் வீல் சேர், காதொலி கருவி, திறன்பேசிகள்), செயற்கை கை, கால் அளவு எடுக்க விவரம் சேகரித்தல், இணைய சேவை மூலம் பேருந்து அட்டை பதிவு மேற்கொள்ளுதல் மற்றும் புதுப்பித்தல், 10 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு செய்தல் போன்ற அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறுதல்

மேலும், இம்முகாமில் வருவாய் துறை உள்ளாட்சித்துறை, மருத்துவ துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, பள்ளி கல்வித்துறை, முன்னோடி வங்கி, கூட்டுறவுத்துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வேளாண்மைத்துறை, போக்குவரத்து துறை, சிறுகுறு தொழில்கள் துறை, பால்வளத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், தாட்கோ ஆகிய துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும்மேலும் இச்சிறப்பு முகாமில் ஆதார் அட்டை பதிவு மற்றும் ஆதாரில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும், குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம் ஆகிய திருத்தங்கள் போன்ற பணிகள் இம்முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளது.

Advertisement

எனவே, இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அரசு நல திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம். மேற்படி, இம்முகமானது பகுதி வாரியாக நடைபெற உள்ளதால் 08.09.2026 அன்று அன்னூர் தாலுக்கா அலுவலகத்தில் சிறப்பு முகாம் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் அன்னூர் வட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் மட்டும் முகாமில் கலந்து கொண்டு அரசின் நலத்திட்டங்கள் விண்ணப்பிக்கலாம் என கோயம்புத்தூர் மாவட்ட பெறுவதற்கு ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...