கோவை : கோவை நீதிமன்ற வளாகத்தில் ‘தேசத்திற்கான சமரசம் 3.0’ சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், மாணவிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கோவை நீதிமன்ற வளாகம் முன்பு இன்று ‘தேசத்திற்கான சமரசம் 3.0’ என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்ரீதேவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கலெக்டர் அலுவலகம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, அரசு கலைக்கல்லூரி சாலை வழியாக சென்றது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் பொதுமக்களிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், மாணவிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் சமரச தீர்வு மூலம் வழக்குகளுக்கு சுமூகமான முறையில் தீர்வு காணும் வகையில், ‘தேசத்திற்கான சமரசம் 3.0’ என்ற தலைப்பில் சமரச தீர்வு முகாம் நடைபெற உள்ளது.
அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை அந்தந்த மாவட்டங்களில் உள்ள சமரச தீர்வு மையங்களில் இந்த நாடு தழுவிய சமரச தீர்வு முகாம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.





