வெள்ளலூர் குப்பைக்கிடங்கு நிலை மோசம்! 4 வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனருக்கு உத்தரவு

கோவை : கோவை வெள்ளலூரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி கழிவு மேலாண்மை தளத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் திருப்திகரமாக இல்லை என தெரிவித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், இதுதொடர்பாக கோவை மாநகராட்சி கமிஷனர் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கோவை வெள்ளலூர் கழிவு மேலாண்மை தளத்தில் கடந்த ஜனவரி மாதம் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 36 மைக்ரோ கம்போஸ்டிங் மையங்களில் 10 மையங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருப்பது தெரியவந்தது.

மேலும், விண்ட்ரோ கம்போஸ்டிங் பணிகளிலும் பல்வேறு குறைபாடுகள் இருப்பது ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் சுமார் 7.5 லட்சம் டன் பழைய குப்பைகள் இன்னும் அகற்றப்படாமல் இருப்பதும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தொழில்நுட்ப அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், வெள்ளலூர் குப்பைக்கிடங்கின் தற்போதைய நிலையும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளும் திருப்திகரமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது உள்ள செயலாக்க திறனை கொண்டு அக்டோபர் மாதத்திற்குள் பயோ-மைனிங் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியாது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தொழில்நுட்ப அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எதிர்கால செயல்திட்டம், அதற்கான காலக்கெடு, குப்பைக்கிடங்கில் தீ விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி கமிஷனருக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள தீர்ப்பாயம், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை அக்டோபர் 12-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Advertisement

கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் திருப்திகரமாக இல்லை என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மாநகராட்சி கமிஷனர் 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...