சட்டவிதிகள் ஆய்வுக்குழு உறுப்பினர் ஆனார் MLA கனிமொழி சந்தோஷ்…

கோவை: சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் MLA நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


தமக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் புதிய பொறுப்புக்கு நன்றி தெரிவித்து கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக என்னைத் தேர்வு செய்து, கூடுதல் பொறுப்பு வழங்கிய
முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும், சட்டப்பேரவைத் தலைவர் JCD பிரபாகர் அவர்களுக்கும் எனது மரியாதையுடன் கூடிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தின் மாண்பை முன்னிறுத்தி செயல்படுவதற்கான மற்றுமொரு வாய்ப்பாக இந்தப் பொறுப்பை கருதுவதாகவும், சட்ட விதிகள் தொடர்பான முக்கிய விவகாரங்களை பொறுப்புணர்வுடன் அணுகி, சட்டப்பேரவை செயல்பாடுகளின் சிறப்பை வலுப்படுத்தும் வகையில் தனது பங்களிப்பை வழங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்தக் கூடுதல் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றி முன்னெடுத்துச் செல்வேன் என்றும் கனிமொழி சந்தோஷ் உறுதியளித்துள்ளார்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...