கோவை மக்கள் குப்பைகளை நான்கு வகையாக பிரித்து கொடுக்க விழிப்புணர்வு…

கோவை: கோவை துடியலூர் பகுதியில் குப்பைகளை நான்கு வகைகளாக பிரித்துக் கொடுப்பது பற்றி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

குப்பைகளை ஒன்றாக சேர்த்து குப்பை சேகரிப்பவர்களிடம் கொடுப்பதை தவிர்க்கும் பொருட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்பொழுது குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து கொடுக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி மக்கும் குப்பைகளை பச்சை நிற குப்பை தொட்டியிலும் காகிதம் பிளாஸ்டிக் போன்ற உலர் குப்பைகளை நீலம் நிறம் குப்பை தொட்டிகளிலும் மருத்துவ சுகாதார குப்பைகளை சிவப்பு நிற குப்பை தொட்டியிலும், மின்சாதன குப்பைகளை கருப்பு நிற குப்பை தொட்டியிலும் பிரித்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களிடையே எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட துடியலூர் பகுதியில் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நான்கு வண்ண குப்பை தொட்டிகளுடன் பேரணி மேற்கொண்டு துடியலூர் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு இது குறித்து எடுத்துரைத்தனர்.

Advertisement

கட்டாயமாக பொதுமக்கள் அனைவரும் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று இந்த விழிப்புணர்வு பேரணியில் எடுத்துரைக்கப்பட்டது.

இவ்வாறு பொதுமக்கள் நாமே குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பதால் குப்பை சேகரிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும் அதேசமயம் குப்பைகளை வீட்டிலேயே தரம் பிரித்து வைத்து கொள்வதன் மூலம் வீட்டில் நாம் இல்லாவிட்டாலும் குப்பை சேகரிப்பவர்கள் சரியாக பார்த்து அவற்றை சேகரித்துக் கொள்வார்கள்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...