முதல்வரை விமர்சிக்க உரிமை உள்ளது- விஜய் சேதுபதி விவகாரத்தில் கொ.ம.தே.க ஈஸ்வரன் கருத்து…

கோவை: பிக்பாஸில் விஜய் சேதுபதி முதல்வரை பற்றி பேசியதாக கருததுக்கள் பகிரப்படும் நிலையில் முதல்வரின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு உரிமை உண்டு என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை விமான நிலையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை பற்றி தொழில் அமைப்பினர் கவலைக் கொண்டிருப்பதாகவும் ஒருபுறம் மின்வெட்டு மற்றொரு பக்கம் அரசாங்கத்தின் முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை, தமிழகத்தில் ஒப்பந்தம் போடப்பட்ட பல்வேறு தொழிற்சாலைகள் ஆந்திரா விற்கும் மகாராஷ்டிராவிற்கும் செல்லக்கூடிய நிலைமையை பார்க்கின்றோம் மொத்தத்தில் தொழில் முதலீடுகள் செய்பவர்களுக்கு தமிழகத்தில் என்ன நடக்கும் என்ற ஐயப்பாட்டோடு அவநம்பிக்கை வந்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் இந்த சூழலில் எதிர்பார்க்கின்ற முதலீடுகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்றும் அரசாங்கம் ஒரு முடிவை தீர்மானமாக ஆலோசனை எடுக்க என கேட்டுக்கொண்டார்.

புதிய தலைமை செயலகத்திற்கு அனைத்து கட்சிகளும் அனைத்து அமைப்புகளும் எதிர்க்கின்ற சூழல் உள்ளது அங்கு மீனவர்கள் பிரச்சனை சுற்றுப்புற சூழல் பிரச்சனை போக்குவரத்து பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள் உள்ள ஒரு இடத்தில் தலைமை செயலகம் அறிவிக்கப்பட்டு இருப்பது நிறைவேற்ற முடியாது என்று தெரிவித்த அவர் பல்வேறு முடிவுகளில் இந்த அரசு பின்வாங்குவது போல தலைமை செயலகம் முடிவிலும் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

இருக்கின்ற தொழிற்சாலைகள் அனைத்தும் வெளி மாநிலத்திற்கு செல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கின்ற பொழுது புதிய முதலீடுகள் வருவது என்பது சிரமம் ஆகும் என்று கூறிய அவர் முழுமையாக மின்வெட்டு இல்லை என்று கூறுவதை வருகை ஏற்றுக் கொள்வார்கள் தொழிற்சாலைகள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். மின்வெட்டு அனைத்து பகுதிகளிலும் உள்ளது என்பதை ஒவ்வொரு மணி நேரத்திலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது என்றும் ஆனால் துறையின் அமைச்சர் அது மின்வெட்டு அல்ல மின்தடை என்று கூறுகிறார் இதையெல்லாம் கேட்டால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என்று கேள்வி எழுப்பினார். நம்பிக்கையை அரசாங்கம் ஏற்படுத்தவில்லை என்றால் தமிழகத்தின் வளர்ச்சி பின்னோக்கி சென்று விடும் என்று கூறினார்.

Advertisement

விமான நிலையம் பயணிகள் பயணிப்பதற்கு மட்டும் அல்ல என்று கூறிய அவர் தமிழகத்தில் இருந்து ஒரு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்று கூறினால் பெரிய விமான நிலையத்தில் ஏற்றுமதி செய்யப்படும் பொழுது அதன் செலவு குறைகிறது தற்பொழுது பெரிய விமானங்கள் சென்னையில் தர இறங்குவதற்கு வசதி கிடையாது என்று சுட்டிக் காட்டிய அவர் அதனால் பெங்களூர் டெல்லி ஹைதராபாத் போன்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் நாள் கூடுதல் செலவுகள் ஏற்படுகிறது என்றும் கூறினார்.

சென்னையில் புதிய விமான நிலையம் என்பது தொழில் முதலீடுகளுக்கு மிகவும் அவசியம் என்பதை உணர வேண்டும் அதேசமயம் தற்பொழுது சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு இடங்களில் விமான நிலையம் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு எனவே பரந்தூர் விமான நிலையத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான் பல்வேறு அமைப்புகளின் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது என்று தெரிவித்தார்.

Advertisement

பொள்ளாச்சியை தனி மாவட்டம் ஆக்க வேண்டும் என்பது எங்களுடைய தொடர் கோரிக்கை தமிழகத்தில் மற்றொரு மாவட்டம் பிரிக்கப்பட வேண்டும் என்று கூறினால் அது பொள்ளாச்சியாக தான் இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் எந்த ஆட்சி வந்தாலும் இந்த கோரிக்கை என்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் அதனை நிறைவேற்ற வேண்டும் என்று முழுமூச்சோடு எங்களது முயற்சிகள் தொடரும் என்று தெரிவித்தார்.

இடைத்தேர்தல் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட கூட்டணி கட்சிகளை புறம் தள்ளிவிட்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளார்கள் வெற்றி பெற்ற அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு கட்சியில் இணைந்து வேறு சின்னத்தில் மக்களிடத்தில் வாக்குகளை கேட்பது சரியா நியாயமா என்ற கேள்வி மக்களிடத்தில் இருக்கிறது என்றும் மக்கள் எப்பொழுதும் ஏமாந்து கொண்டே இருப்பார்கள் என்று நினைக்கக் கூடாது இது போன்ற முடிவுகளை எடுக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த தேர்தல் ஒரு பாடமாக இருக்கும் என்று கூறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தனிப்பட்ட மனிதர்களை கொச்சைப்படுத்தி பேசுவது தேவையில்லாதது அது தவிர்க்கப்பட வேண்டியதுதான் ஆனால் நடவடிக்கைகளையும் செயல்பாடுகளையும் விமர்சனம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் யார் எதைப் பேசுகிறார்கள் என்பதை பொறுத்து அது உள்ளது என்றும் முதலமைச்சரின் செயல்பாடுகளை அமைச்சர்களின் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது ஆனால் தனிமனித வாழ்க்கையையோ தனி மனிதனைப் பற்றி கொச்சையாக பேசுவதோ கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியது என்று தெரிவித்தார்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் வரி அதிகமாக பிடிக்கப்படுவது தொடர்பான கேள்விக்கு, டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது சுலபமாக உள்ளது அதில் மாற்றுக் கருத்து இல்லை அதை வைத்து அரசுக்கு வருமானம் ஈட்டுகின்ற முயற்சியை எந்த அரசாக இருந்தாலும் செய்வார்கள் அதே போன்று தான் அறிவித்தார்கள் மக்கள் எதிர்ப்பு வந்தவுடன் அது வணிக நோக்கத்திற்கு என்று கூறுகிறார்கள் வரக்கூடிய காலத்தில் அனைத்து பண பரிவர்த்தனைகளுக்கும் வரி பிடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

எல்என்டி பைபாஸ் சாலைகளை பொருத்தவரை இரண்டு சாலைகளை நாம் கேட்டிருந்தோம் என்றும் கடந்த ஆட்சியில் இரண்டு சாலைகளும் தயாராகி வந்த நிலையில் விரைவில் அந்த சாலைகள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று நம்பிக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது உள்ள அரசு பல்வேறு சாலைகளை ரத்து செய்து கொண்டிருக்கிறார்கள் என எனவே அந்த சாலைகள் வருமா என்ற பயம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார். ஒரு காலத்தில் கோவையில் உள்ளவர்கள் l&t பைபாஸ் பயன்படுத்தினால் விரைந்து சென்றுவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது அந்த எல்என்டி பைபாஸ் சாலையை அவாய்ட் செய்துவிட்டு நகருக்குள் செல்லும் நிலைமைக்கு மாறி விட்டோம் எனவே எல் அண்ட் டி பைபாஸ் சாலை என்பது மிக மிக அவசரம் எனவே அரசு உடனடியாக பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

லஞ்ச லாவண்யம் இல்லை என்று சொன்னால் முதலில் மகிழ்ச்சி அடையக் கூடியவர்கள் நாங்கள் தான் என்றும் லஞ்ச லாவண்யத்திற்கு எதிரானவர்கள் நாங்கள் ஒரு சில இடங்களில் தற்பொழுது இல்லை என்று கூறுகிறார்கள் ஆனால் ஒரு சில இடங்களில் லஞ்ச லாவண்யம் உள்ளது என்று அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளார்கள் எனவே பலதரப்பட்ட கருத்துக்களை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது இன்னும் கொஞ்ச காலம் சென்றால் அனைத்தும் தெரிந்து விடும் பட்ஜெட் தற்பொழுது தான் முடிந்துள்ளது பட்ஜெட் ஒவ்வொன்றாக போட்டுக் கொண்டிருக்கிறார்கள் லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சி நடைபெற்றால் கண்டிப்பாக அதனை வரவேற்கலாம் என்று தெரிவித்தார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நாளை முதல் கோவை விமான நிலையத்தில் யாத்ரிசேவான் அபியான் நிகழ்ச்சி…

கோவை: கோவை விமான நிலையத்தில் நாளை முதல் ‘யாத்ரி சேவா அபியான்’ விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், வரும் செப்டம்பர் 17-ஆம்...

Video

தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…

கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்மீண்டும் வலம் வந்த வேட்டையன்காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி,...