கோவை: பன்னீர்மடை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவை பன்னீர்மடை முல்லை நகர், தேவி நகர், ஸ்ரீ ரங்கா நகர், அஷ்ரயா கார்டன் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவை பன்னீர் மடை முல்லை நகர், தேவி நகர், ஸ்ரீ ரங்கா நகர், அஷ்ரயா கார்டன் பகுதியில் கடந்த 14 ஆண்டுகளாக எழுந்தருளி அருள்பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் புதிதாக கோபுரம், முன் மண்டபம் கட்டப்பட்டு ஸ்ரீ செல்வ விநாயகருக்கு இரண்டாவது புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் புதன்கிழமை அதிகாலை முதல் கால வேள்வி யாகம், மங்கல இசையுடன் தொடங்கி, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்ச கவ்ய பூஜை, மகா கணபதி யாகம், சுதர்சன மகாலட்சுமி யாகம், நவகிரக யாகம், தனபூஜை, கோ பூஜை, மகா பூர்ணா ஹீதி, தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ தர்மராஜர் கோவிலில் இருந்து தீர்த்த கலசங்கள், முளைப்பாளிகை எடுத்து வருதல் நடைபெற்றது.
மாலை விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்ச கவ்ய பூஜை, தேவதா அனுக்ஞை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹனம், அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனன், கும்பஸ்தாபனம், கலாகர்ஷனம், பாலாலயத்தில் இருந்து கலசங்கள் யாக சாலைக்கு எழுந்தருளல் மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, த்ரவ்ய யாகம், மூலமந்தர யாகம், பூர்ணஹீதி, தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கினர்.

தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால வேள்வியாகம் மங்கள இசையுடன் தொடங்கி விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், த்ரவ்ய பூஜை, நாடி சந்தனம், ஸ்பரிஷாஹீதி, மூல மந்திர யாகம், ஷடத்வ யாகம், மஹா பூர்ணாஹீதி, யாத்ரா தானம் நடைபெற்று கலசங்கள் ஆலயம் வலம் வந்தன.
தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்று. பக்தர்களுக்கு பூ மற்றும் புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை கோவை பெரிய தடகம் ஸ்ரீ லலிதாம்பிகை பீடம் ஸ்ரீல ஸ்ரீ ஜெகத் ஆனந்தா சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் ஆசிகளுடன் கோவை பெரிய தடாகம் ஸ்ரீ அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோவில் சிவகங்கை நடத்தி வைத்தனர்
அதைத்தொடர்ந்து விநாயகருக்கு பால் தேன், இளநீர், பன்னீர், சந்தனம், திருநீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று மூல ஆலய கும்பாபிஷேகம், மகாபிஷேகம், தசதானம், தச தரிசனம், அலங்கார பூஜை, மகா தீபாராதனை மற்றும் கோ பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் கமிட்டியார், முல்லை நகர், தேவி நகர், ஸ்ரீ ரங்கா நகர், அஷ்ரயா கார்டன் மற்றும் பன்னீர் மடை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.





