கோவை: கோவை அரசு மருத்துவமனைக்கு ரத்ததானம் வழங்கும் வகையில், தளபதி இரத்ததான இயக்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முகாமில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர்.
கோவையில் கடந்த 19 ஆண்டுகளாக தொடர்ந்து ரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோளின்படி, அவசர சிகிச்சை மற்றும் மருத்துவ தேவைகளுக்காக ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் இந்த முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
முகாமில் பங்கேற்ற இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் ரத்ததானம் வழங்கினர். சேகரிக்கப்படும் ரத்தம் கோவை அரசு மருத்துவமனையின் தேவைக்காக வழங்கப்பட உள்ளது.
Also Read: போலி சான்றிதழ் கொடுத்து ரூ.25.50 லட்சம் மோசடி! 2 ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை
ரத்ததானம் செய்வதன் மூலம் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் உதவ முடியும் என்பதால், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
“என்றும் மக்கள் சேவையில் தொடர்ந்து நிற்போம்” என்ற நோக்கத்துடன், தளபதி இரத்ததான இயக்கத்தின் சமூக சேவைப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.





