ஆர்.எஸ்.புரத்தில் போதை மாத்திரைகளுடன் சுற்றித்திரிந்த 2 பேர்! போலீசார் அதிரடி

கோவை : கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோடு பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளுடன் சுற்றித்திரிந்ததாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 230 போதை மாத்திரைகள், 5 ஊசிகள், ரூ.60 ஆயிரம் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

ஆர்.எஸ்.புரம் போலீசார் டி.பி. ரோடு பகுதியில் நேற்று தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள பிரபல லாட்ஜ் அருகே 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தனர்.

இதையடுத்து போலீசார் இருவரையும் பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் விற்பனைக்காக வைத்திருந்ததாக கூறப்படும் 230 போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் 5 ஊசிகள் இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த சபரீசன் விஷ்வா (23) மற்றும் திலகர் (23) என்பது தெரியவந்தது.

Advertisement

மேலும், அவர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

தொடர்ந்து போதைப்பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, யாருக்கு விற்பனை செய்யப்பட இருந்தன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் மாணவர்களுக்கு உணவு ஊட்டி விட்டு மகிழ்ந்த அமைச்சர்…

கோவை: கோவையில் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்க திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுடன் உணவருந்திய அமைச்சர். காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தமிழக முதலமைச்சர் விஜய்யால் இன்று துவக்கி வைக்கப்பட்டது. அதனை...

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...