கோவை: கோவை ஆனைக்கட்டியில் 1,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுடன் தீபாவளி கொண்டாடிய MLA கனிமொழி சந்தோஷ்.
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆனைக்கட்டி மற்றும் பாலைமலை பகுதிகளில் பழங்குடியின மக்களுடன் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில் 1,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அப்போது பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலை மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். மேலும் அம்மக்களுடன் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்,
“ஆனைக்கட்டி கிராமத்து மக்களை காண வருவது எனக்கு ஒரு ஆசீர்வாதமாகவே கருதுகிறேன். இங்குள்ள மக்களுடன் தீபாவளியைக் கொண்டாடியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
எனது முதல் பணி இந்தப் பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதுதான்.
கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தொடர்பாக மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்து கொடுப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்துவேன்” என்று உறுதியளித்தார்.
பண்டிகைக் கொண்டாட்டத்தைத் தாண்டி, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம், அடிப்படை வசதிகள் மற்றும் பாரம்பரிய கலாசாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தத் தீபாவளிக் கொண்டாட்டம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.






