அண்ணா சிலை “ஹெல்மெட் இல்லாம 3 பேர் போறீங்களே!” – ட்ரைவர் அட்வைஸ் ; நடுரோட்டில் அலப்பறை செய்த பெண்கள் – வீடியோ

கோவை : கோவை அண்ணா சிலை அருகே அரசு பேருந்தை மறித்து பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..

Advertisement

அண்ணா சிலையில் இருந்து ஆர்.டி.ஓ. அலுவலகம் வழியாக காந்திபுரம் நோக்கி 96-ம் எண் அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்துக்கு முன்னால் பெண் ஒருவர் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அவருடன் பின்புறத்தில் கர்ப்பிணிப் பெண்ணும், குழந்தையும் இருந்ததால் ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணித்தனர்.

பேருந்து அருகே ஸ்கூட்டி சென்றபோது உரசும் வகையில் ஆபத்தான சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பஸ் ஓட்டுநர், வாகனத்தை கவனமாக ஓட்டுமாறு அந்தப் பெண்ணை எச்சரித்ததாக தெரிகிறது.

ஓட்டுநரின் அறிவுறுத்தலால் ஆத்திரமடைந்ததாக கூறப்படும் அந்தப் பெண், தனது ஸ்கூட்டியை திடீரென பஸ்சின் குறுக்கே நிறுத்தியுள்ளார். இதனால் பேருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன், ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

அப்போது ஓட்டுநர், ஹெல்மெட் அணியாமல் கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தையுடன் 3 பேர் ஒரே வாகனத்தில் செல்வது பாதுகாப்பானது அல்ல என்றும், எதிர்பாராத விபத்து ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு அந்தப் பெண், ஹெல்மெட் அணியாததற்கான அபராதத்தை போலீசாரிடம் செலுத்திக் கொள்வதாகவும், இதுகுறித்து ஓட்டுநர் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இதனால் அண்ணா சிலை முதல் காந்திபுரம் செல்லும் முக்கிய சாலையில் அரசு பேருந்து நிறுத்தப்பட்டது. பேருந்தின் பின்னால் வந்த வாகனங்களும் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனை கவனித்த பொதுமக்கள் மற்றும் சக வாகன ஓட்டிகள் சம்பவ இடத்தில் தலையிட்டு அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தினர். பின்னர் ஸ்கூட்டியை சாலையில் இருந்து எடுத்ததையடுத்து, அரசு பேருந்து தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

அமைச்சர் வன்னியரசுவின் செயல் விஜய் அரசுக்கு தீங்கு விளைவிக்கும்- கிருஷ்ணசாமி கருத்து…

கோவை: அமைச்சர் வன்னியரசுவின் செயல் விஜய் அரசிற்கு தீங்கு விளைவிக்கும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்க பரிசீலிக்கப்படும் என கூறியதற்கு அமைச்சர் வன்னியரசு மன்னிப்பு...

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...