“ஊனுண்ணி வனவிலங்கு தாக்கியதா?” – காயத்துடன் தவித்த குட்டி யானை உயிரிழப்பு; மதுக்கரையில் சோகம்

கோவை : கோவை மதுக்கரை வனப்பகுதியில் ஊனுண்ணி வனவிலங்கு தாக்கியதில் குட்டி யானை உயிரிழப்பு.

Advertisement

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட சோளக்கரை வனப்பகுதியில், காயத்துடன் கடந்த 5 நாட்களாக வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வந்த குட்டி யானை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறாய்வில் குட்டி யானையின் உடலில் ஆழமான துளைக் காயங்கள் இருந்தது தெரியவந்த நிலையில், ஊனுண்ணி வனவிலங்கு தாக்கியிருக்கலாம் என வனத்துறையின் முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகம், கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட சோளக்கரை வனப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த செப். 18-ம் தேதி காலை சுமார் 10.30 மணியளவில் கேரள வனப்பகுதியில் இருந்து 3 பெண் யானைகள் மற்றும் ஒரு குட்டி யானை என 4 யானைகள் கொண்ட கூட்டம் தமிழக வன எல்லைக்குள் நுழைந்தது. தொடர்ந்து மதுக்கரை வனச்சரகத்தின் நவக்கரை பிரிவு, புதுப்பதி சரகப் பகுதிக்கு அந்த யானைக் கூட்டம் வந்துள்ளது.

Advertisement

அப்போது கூட்டத்தில் இருந்த குட்டி யானை ஒன்றின் பின்புற காலில் காயம் ஏற்பட்டு, நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்ததை வனத்துறையினர் கவனித்தனர்.

இதையடுத்து கோவை மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில், மதுக்கரை வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறை குழுவினர் குட்டி யானையின் உடல்நிலை மற்றும் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

Advertisement

செப். 18 முதல் 22-ம் தேதி வரை பகல் நேரங்களில் வனத்துறை தனிப்படை குழுவினர் நேரடியாகவும், இரவு நேரங்களில் அதிநவீன ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் குட்டி யானை கண்காணிக்கப்பட்டது.

குட்டி யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறையினர் அருகில் செல்ல முயன்றபோது, அதனுடன் இருந்த 3 பெண் யானைகளும் குட்டியைச் சுற்றி பாதுகாப்பாக நின்று, யாரையும் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில், செப். 22-ம் தேதி இரவு ட்ரோன் மூலம் கண்காணித்தபோது குட்டி யானை ஒரே இடத்தில் அசைவின்றி இருந்ததும், அதனுடன் இருந்த மற்ற யானைகள் அங்கிருந்து சென்றுவிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து செப். 23-ம் தேதி காலை மதுக்கரை வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது குட்டி யானை உயிரிழந்த நிலையில் கிடந்தது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து கோவை உதவி வனப் பாதுகாவலர் தலைமையில் வனக்குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், கோவை வனக்கோட்ட வனக் கால்நடை மருத்துவர், எட்டிமடை உதவி கால்நடை மருத்துவர் மற்றும் WNCT, WWF-India, ஓசை உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் குட்டி யானைக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

உடற்கூறாய்வின்போது குட்டி யானையின் உடலின் பல்வேறு பகுதிகளில் ஆழமான துளைக் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. காயங்களின் தன்மை மற்றும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், காட்டில் வாழும் ஏதேனும் ஒரு ஊனுண்ணி வனவிலங்கு தாக்கியதன் காரணமாக குட்டி யானை உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையின் முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...