கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின.

Advertisement

கோவை கணுவாய் பகுதி VMT நகரில் தனியார் மருந்து கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இரவு கடை பூட்டி இருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டு கொண்டு வந்து அணைத்தனர்.

தீ விபத்து காரணமாக மருந்து கடையில் இருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருட்கள் தீயில் கருகி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரம் என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

குறுக்கே வந்த பாம்பு- அலறி அடித்து ஓடிய சிறுவன்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: சைக்கிளில் சென்ற போது திடீரென குறுக்கே வந்த பாம்பின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சைக்கிள் ஓட்டி செல்லும் போது திடீரென குறுக்கே வந்த பாம்பைக் கண்டு அலறி அடித்து தாவி குதித்து...