கோவையில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்தெ நாட்களில்? முழு விவரம்!

கோவை: கோவையில் அடுத்த 6 நாட்களும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. வரும் நாட்களில் பகல் நேர வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரையும், இரவு நேர குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

கோவை மாவட்டத்தில் பருவமழை வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், வானிலை மையம் மழை அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதன்படி, கோவையில் மலை மற்றும் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டும் சில நேரங்களில் மழை பதிவாகி வந்தது.

ஆனால், கடந்த வாரம் கோவையின் பல்வேறு பகுதிகளிலும் மழை பதிவாகி இருந்தது. இதனிடையே அடுத்த 6 நாட்களுக்கு கோவையின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாள் வாரியாக மழை வாய்ப்பு மற்றும் வெப்பநிலை கணிப்பை இந்த தொகுப்பில் காணலாம்…

செப். 25-ம் தேதி வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

செப். 26-ம் தேதி சனிக்கிழமையும் ஓரளவு மேகமூட்டமான வானிலை நிலவும். அன்றும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

செப். 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் இதேபோன்ற வானிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் வானிலையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரையும், இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகலாம்.

Advertisement

செப். 28-ம் தேதி திங்கட்கிழமை முதல் மழையின் தீவிரம் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஓரளவு மேகமூட்டத்துடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

செப். 29-ம் தேதி செவ்வாய்க்கிழமையும் கோவையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப். 30-ம் தேதி புதன்கிழமையும் இதேபோன்ற வானிலை தொடரும். ஓரளவு மேகமூட்டத்துடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

Also Read: கோவை மாநகர காவல் ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்! என்ன காரணம்?

இதனால் கோவையில் வரும் நாட்களில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தாலும், அவ்வப்போது மேகமூட்டம் மற்றும் லேசான மழை பெய்யும் சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களிலும், அதன்பிறகு திங்கள் முதல் புதன்கிழமை வரையிலும் மழைக்கான வாய்ப்பு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்புகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. அப்படி மாறுதல்கள் ஏற்படும் போது வானிலை மையம் அதனை அறிவிக்கும், நியூஸ் க்ளவுஸ் கோயம்புத்தூரில் செய்தியை பதிவிடுகிறோம் இணைந்திருங்கள் வாசகர்களே…

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...